பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வெள்ளிக்கிழமை காலை.

அவள் வென்னிருள்ளிருந்து வெளிப்படுவதற்கும். அகஸ்மாத்தாய் என் ஸ்னானத்துக்குத் தயாராகிக் கொண்டு அவளை எதிர் கொள்வதற்கும் சரியாயிருந்தது. மோதிக் கோள்ளவில்லை ஆனால் கிட்டத் தட்ட அப்படித்தான்.

சம்பந்தா சம்பந்தமில்லாது இந்த சமயத்தில் ஏன் இந்த கினைப்பு? தெரியவில்லை.

கூந்தலைச் சிம்மாடுக் கொண்டையிட்டு, முகத்தில் மஞ்சள் பளிச்சிட, கூடவே மைசூர் ஸாண்டல் சோப்பின் 'கம்-உடம்பில் ஈரத்தைச் சுற்றிக் கொண்டே, அரக்குக் கலர்ப் புடவை. உள்ளே எதுவும் அணியவில்லை. தோய்த்த ரவிக்கை தோள்மேல் தொங்கியது. இருதோள்களும் மஸ்தாய் மறைவு எதுவுமிலாமல்.

ஈரத்தில் விளிம்பு காட்டும் அவள் மார்முட்டை இப்போ நினைத்தாலும் சுருக்' வயது தாண்டிவிட்டாலும் இதற்கெல்லாம்-நினைப்புக்கு வயதுகிடையாதோ? அந்த கினைப்பில் அந்த வயதாகி விட்டேன். அதனால் அப்படித் தோன்றியது. அந்த வயதின் குற்றமோ, உரிமையோ என் னென்று கண்டேன்?

அவள் முகத்தில் ஒருங்கே வெட்கமும் வெற்றியும் குழுமி கண்களில் ஒரு சவால் புன்னகை என் சாக்கு

எப்படி?’ என்கிற மாதிரி, சரேலென்று போய் விட்டாள்.

அம்மன் புறப்பாடு அலங்காரம் போல் பின்னழ்குகள் பிதுங்கின.

நின்றவிடத்தில் ஸ்தம்பித்து கின்றேன். அப்போ நான் நினைத்தது என்னென்ன? எல்லாம் இப்போ நினைவுக்கு