பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?

ஆவாள். அழைத்துப் போனால் செலவு கூடத்தான்; ஆனால், இந்த சமயத்தில் செலவைப் பார்த்தால் முடியுமா?

அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். 'சாமி களிபறையறதா?”

'களியுமில்லை, கஞ்சியுமில்லை; எனக்கு உற்சாகம் மூண்டுவிட்டது. மெய்யாகத்தான் உடனே எனக்கு ஸ்வரம் இறங்கிற்று. ஆனால், உன் அப்பா சம்மதிப் பாரோ இல்லியோ?”

  • அச்சனைக் சரியாக்கிடலாம் அவள் கண்களில் பேராசையின் குறு குறுப்பு ஏறிற்று.

'அம்மை?”

அலகூதியமாகச் சூள் கொட்டி விட்டு வெளியே ஓடினாள்.

7

மடிமேல்-தோசைமேல் கண் விழுந்தது. திடீரெனப் பசி கொழுந்து விட்டது. தோசை ஆறிவிட்டது. பசை வரண்டு விட்டது. விண்டு குழம்பில் தோய்த்தேன், குழம்பு ஆறிப்போச்சு. உர்ஸ் செய்யும் பாகத்துக்கும் எனக்கும் பொதுவாக ராசி கிடையாது. மனம் போல மாங்கல்யம். இந்தச் சமயத்தில் இந்தப் பழமொழிக்கு என்ன பொருள்?

கனைப்பு. மிஸ்டர் ஜ்யார்ஜ் வாசலில், வாயில் ஒரு பல்குச்சியை மாட்டிக் கொண்டு கின்றார். அந்தப் பல் குச்சிக்கு அர்த்தமே கிடையாது. பல் விளக்கியுமிருப்பார்; விளக்காமலுமிருப்பார். வெறும் வாய்க்கு ஒண்னு,