பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

  • உன் ப்ளான் என்னவோ?’’

ஹோட்டல் மீல்ஸ். ஞான் திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்தலம் அறிஞ்னு. எனக்கு நான் விஜ், சாமிக்கு விஜ்ஸ்பெஷல் செட் ஏனங்கள். சாமிக்கி ஒர்ரி வேண்டா-'

"உர்ஸ் உனக்கு ஹ்ருதயம்னு ஒண்ணு இருக்கா? இருந்தால் அதில் இருட்டு, ஒட்டட்ை, வெளவால், துரிருசல் தொங்கிக்கொண்டு...'

சாந்தமாக என் அருகே அமர்ந்தாள். “எங்களுக்கு ஹ்ருதயம் கட்டுப்படி ஆகாது' எனக்கு நாக்கு, வாய்க் கூரையை முட்டிற்று.

சொல்லி வைத்தாற்போல் ஒரு பட்சி கக்கடரிட்' வெனச் சிரித்தது.

கடைசி வார்த்தை எனக்குக் கிடையாது என்கிற சாபம் என்று வாங்கிக் கொண்டேன்? அவள் அமைதியாகத் தன் கை நகங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

என் ஜன்னல்களைக் கூட நான் மூடியாச்சு. என் கூரை, என் சுவர்கள் பத்திரமாயிருக்கின்றன. கான் இல்வாதவள் இல்லாதவரின் தத்துவம் இது தானா? இரவின் காற்றுக்கள் போல நீ ஊளையிட்டுக் கொண்டிரு... என்று தன் மெளனத்தால் போதிக்கிறாள்.

திருவனந்தபுரத்துக்குப் பஸ்ஸில் தொற்றிக் கொண்டு திருவனந்தபுரம் சேர்ந்ததும் எங்கள் வருகைக்கும் சென்னைக்குத் தந்தி அடித்து கருணாகரனிடம் போய்க் கெஞ்சிக் கூத்தாடி இன்னும் கொஞ்சம் பணம் பெயர்த்துக் கொண்டு உர்ஸைப் பார்த்தவுடன் அவர் புருவங்கள் நெற்றி ஏறி, முன் மண்டை வழுக்கையில் தத்தளித்ததைப் பார்க்