பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

எனக்கும், குழந்தைகளுக்கும் இதுவே ஒரு சச்சரவு.

'அப்பா வேலையிலிருந்து ஒய்வு வாங்கிண்டு வீட்டோடு அடைஞ்சாலும் அடைஞ்சா, எப்பவும் திணிதானா ஸ்மரணை? இன்னிக்கு என்ன சமையல்? அடுத்து என்ன டி.பன்? சாப்பிட்ட வாய்க்கு நொறுக்குத் தீனி முறுக்கு, கிறுக்கு, சீடை, தட்டை சே, படுபோர்.'

என்னைச் சொல்றான்கள், இவன்கள் குறைத்துத் தின்கிறான்களா? இஷ்டப்படி சுற்றி விட்டு வெளியே தின் பது போதாமல், வேளையில்லா வேளையில் திரும்பி வந்து, ‘என் வீதம் எங்கே?' என்று சட்டம் பேசித் தட்டுத்தட் டாகக் காலி பண்ணுவது அவர்களுக்கும் தெரிவதில்லை. அவர்கள் அம்மைக்கும் தெரிவதில்லை. போதும் போதாக்கு "ஜமா சேர்த்துக்கொண்டு வந்து, மாதக் கடைசியில் ஒன்று இருக்கும், ஒன்று இருக்காது-நான் என்ன இப்போ மாதச் சம்பளக்காரனா, ஒழுங்காய்த் தவறாத வருமானத்துக்கு:இவர்கள் அடுக்குள் நிலவரம் தெரியாமல் அல்லது அது பற்றி அக்கறையே இல்லாமல் அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று அட்டகாசம் பண்ணுகையில், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பொருமிய படி எத்தனைமுறை என் அறையில் சிறையிருந்திருப்பேன், இருக்க முடியும்:

என் வீட்டில் நானே செல்லாக் காசாக மாறிக்கொண் டிருக்கும் உறுத்தல் தாங்கக் கூடியதாக இல்லை. இவர்கள் இனிமேல் தலையெடுத்து நாலுகாசு தன்னதென்று, சம்பாதிக்கஆரம்பித்து விட்டால் இவர்களையும் கட்டிப் பிடிக்க முடியாது; இவர்கள் தாயாரையும் கட்டிப் பிடிக்க முடியாது.