பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

-:சிறுசுகள் கொஞ்சம் அப்பீடியுமிப்பீடியுமாத் தானிருக்கும். நாம் தான் விட்டுக் கொடுத்துண்டு போகனும்?'

-'சிறுசுகளாக நாங்கள் இருந்த போது இப்பிடியா இருந்தோம்? இப்போ இவர்களை என்னக் காலை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது, என்ன தட்டுக் கெட்டுப் போகிறது?’’

'உங்கள் காலம் வேறு; இந்தக் காலம் வேறு. உங்கள் அம்மா உங்களைத் தன் முன்றானையில் முடிச்சுப்போட்டு வைச்சிருந்த மாதிரி இப்போ முடியுமா?"

பெண்கள் எவ்வளவு யதார்த்த வாதிகள், அந்தந்த கிலைமையின் வார்ப்பிடத்தில் அதற்கேற்றபடி அளவாகி விடுகிறார்கள். அந்த சுலபம் ஏன் நம்மிடத்தில் இல்லை?

இந்த உதவாக்கரை யோசனை அதன் பல்வேறு ரூபங்களில் என்னை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கையி லேயே, மதுரை எப்போது வந்தது?

வண்டியைத் தள்ளியபடி, தலை மேல் கூடைகளிலும், தோள்மேல் தட்டுகளிலும் சரக்குகளின் அறைகூவலின் இரைச்சல்களின் இடையே உர்ஸின் குரல் என்னைத் தேடி வந்தது. நான் குத்துக்கல்லாய் எதிரே உட்கார்ந்திருக் கிறேன்:

'ஊணு என்னவாச்சு?”

'ஊணா உனக்கு எப்படிப் பசிக்கலாம்? பசிக்க என்ன கியாயமிருக்கு?”

உலகத்திலேயே பெரிய ஜோக் கைக் கேட்டாற்போல் உர்ஸ் கைகொட்டிச் சிரித்தாள்,