பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இவளுடைய வேங்கைப்புலி சாப்பாடு கண்டு இவளைப் பிடிக்கவில்லை.

ஒருவர் மேல் பிடித்தம் தோன்றுவதற்கும், விடுவதற் கும் இடைக்கோடு இவ்வளவு மெலிந்த இழையா? அல்ல, இதுவும் என் வயதின் கோளாறா? .

மதுரம் அப்பவே சொல்வாள்: கொட்டடா குடையடான்னு இருந்த இடத்தைவிட்டு நகராமல் கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்துண்டு, யார் யார் என்ன என்ன செய்யறான்னு கவனிக்கறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சு, காலைமாலை காலாற ஹாய்யா நடந்துட்டு வர்றதுதானே! எதையுமே இப்படி காவல் காத்தால் எதுவுமே தாங்காது.'

மதுரத்தின் இடி சொல் ஒரு பக்கம் இருக்கட்டும். அதனால், மூளும் கோபம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவள் சொல்வதில் உண்மை இருக்குமோ? இந்த வயதுக்கே குற்றம் கண்டு பிடிக்கும் சுபாவம் வந்து விடுமோ? பிறகு தான் ஆவதுதான் என்ன? ஊர் திரும்புகையிலே கூடவே குழப்பங்கள் எதிர் கொள்கின்றன. அஞ்சு வருடங்கள் விடு பட்ட மாதிரி இருந்தேன். ஆனால் மாதிரிதான் போலும்.

ஜன்னல் வழி பனி சில்லென்று மோதிற்று. போர்வைக் கடியில் உடல் வெடவெடத்தது. எழுந்து கண்ணாடிக் கதவை இறக்குகிறேன். கூடவே கிலா துணை வந்து கொண்டிருக்கிறது. அதற்குக் குளிர் கிடையாதா? வானத்தை மேகத்தை கrத்திரக் கூட்டங்களிடையே என்ன லகுவாய் அலட்சியமாக சவாரி செய்கிறது! சிரிக் கிறது. என் சஞ்சலத்துக்கு சந்திரனே சாகதி.

எதிர் பெஞ்சில் உர்ஸ் நிம்மதியாகத் தூங்கிக் கொண் டிருக்கிறாள். சுருண்டு படுத்துக் கொண்டு நேர்த்தியான விலங்கு. நானும் கண்ணயர்ந்திருக்க வேண்டும்,