பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

"ஒஹ்ஹோ ஸஹாப்தம் பேரிலும் கடக்கறாப் போலி

ருக்கு. ஸாதா ஸாமிநாதன் நான் இங்கிருக்கும்போதே சாமாவாகி, சியாமாகமாறி, இப்போ சியமந்தாக்கும்'

'சியாமந்துக் கல்யாணம் கூடும் போல இருக்கு!”

இப்போ எனக்கு வண்டி எங்கு திரும்பிற்று என்று கூடத் தெரியவில்லை. ஏதோ ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தோம். அடியில் வெள்ளம் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போ உனக்கு உடம்பு ஒன்று மில்லையா? கலியாணத்துக்கு என்னை வரவழைக்க உன் உடம்பு ஒரு சூழ்ச்சியா?”

"அப்போ எனக்கு உடம்புக்கு ஏதேனும் இருக்க ஆணும்னு ஆசைப்படுகிறீர்களா?

"அப்போ உனக்கு உடம்புக்கு ஒண்னுமில்லையா?"

'உஸ்’ அவள் கை, என் மேல் தங்கி அமர்த்திற்று. எனக்குக் குரல் தடித்ததும் உர்ஸ் ஜன்னலுக்கு வெளியே கவனமானாள்.

“இத்தனைநாள் கழித்தும் ரயில்வே ஸ்டேஷனி லிருந்தே நம் குஸ்தி தொடங்கனுமா?"

'கம் வாழ்க்கையே தர்க்கத்தின் தொடர்கதையாக ஆகி விட்டதே.'

"அதைத்தான் நானும் கேட்கிறேன். அது என் தலை யெழுத்தா?’’

"உன் தலையெழுத்தல்ல. உன் தராசின் தடுமாற்றம்'

'என்னவோ புரியாமல் உங்கள் பாஷையில் பேசுங்கோ?’’