பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

என் சிரிப்பு புகைந்தது. உனக்கா புரியாது: மது, ே கொஞ்சம் கூட மாறவில்லை."

'ஏன், நீங்கள் உங்கள் பிள்ளை கலியாணத்துக்கு வர மாட்டீர்களா? வரக்கூடாதா?’’

'இப்போ எனக்கென்ன தெரியும்? அப்படியே உண்மையைச் சொல்லி என்னை அழைத்துப் பார்க்கிறது

தானே!"

அவள் தன் தலைமேல் கை வைத்துக் கொண்டாள். 'இல்லை சத்யமா எனக்கு உடம்பு சரியில்லை. அவள்

கண்கள் துளும்பின. கான் அடங்கிப் போனேன்.

9

எனக்கு ஒரு பேத்தி இருக்கிறாள். இருக்கிறாளாம் என்கிற முறையில். அப்பவே அப்படி. இப்போ இன்னும் கேட்க வேண்டாம். வழிகாட்டின மாதிரி நானே இப்பத் தானே வந்திருக்கிறேன்! எதுவுமே பழங்கதை அல்ல. எல்லாம் அப்பப்பா மூண்டெழும் ஒரே கதைதான். அவிந்த அடுப்பை நம்பாதே. நீர்த்துப்போன சாம்பலுக்குள் ஒரு சுற்iல்-ஹாம்...

மதுரம் என்னுடைய அளவு தம்ளரில் அதனடியில் ஒரு பாத்திரம் உண்டு- டபராவுமில்லை, பேலாவுமில்லை யென்று இடையில் ஒரு உரு. (உங்களைப் போலவே பிடி படாமல் ஒரு ஏனம்-அப்படி என்னை ஏளனம் பண்ணு வதும் வேடிக்கையாக இருந்த அங்காள்-) ஆவி பறக்க, பொன்னிறத்தில் என் இஷ்டப்படி நுரையிலாது, கசப்பு மட்டும் போகும் சீனி-எனக்குக் காப்பியைக் கண்ட மாதிரியாகவா இருக்கிறது. கண்ணிரே வந்து விடும் போல்