பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

  • உர்ஸ்: ஒ' அர்ச்சுனன் ஊர்வசியை வணங்குகிறான். “ஸாரி, உங்கள் மனசைப் புண் படுத்திட்டேனோ? மன்னிச் சிடுங்கோ.'

அவள் முகம் டால் அடித்தது. இல்லேங்க, அச்சன் மேல் நீங்கள் வாஞ்சைகாண எனக்குப் பரவசம்-’

(லேசாக மூச்சு தேம்பியதோ? ஏ, உர்ஸ்i)

'நீங்கள் சொல்றேள்-ஆனால் அப்பா இதையெல்லாம் கடிப்பு என்று விடுவார்.'

'இது நடிப்பானால் அப்போ நீங்கள் பெரிய களி யாட்டம்-ஐ மீன் ஆக்டர்' அவன் சிரித்தான். அரும்பு மீசையில் செவ்வரி பளபளக்கிறது. அவனுக்கு எப்பவுமே கன்னம் குழியும்.

'நீங்கள்தான் சொல்றீங்க. ஒரு சான்ஸ், எக்ஸ்ட் ராவாக் கூடக் கிடைக்க மாட்டேன்குதே!”

'சிங்களுக்குக் கிட்டாமல், வேறு யாருக்குக் கிட்ட கியாயமுண்டு: செளந்தர்யவான்-'

"அஹ்ஹா, என் கன்னத்தில் சிவப்பு ஏறுகிறதா பாருங்கள்!'

இப்போ அவள்முறை, வெட்கமுற, மற்றவர் இருப்பதையே தான் மறந்து விட்ட உணர்வு திண்டித் தலை குனிந்தாள். ஆம், இங்கே என்ன நடந்து கொண் டிருக்கிறது?

இத்தனை பேர் நடுவே அவர்கள் இருவருக்கு மட்டும் சொந்தமாய், பிரத்யக அங்கர்த்யானத்தில்...

நடுவில்...,