பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

"என் பிள்ளைக்கு மட்டும் பண்ணினேனா? எல்லாரும் தின்பதிலும் குறைச்சலில்லை தாத்து றது லேயும் குறைச் சலில்லை."

'நல்ல கதையாயிருக்கே! பண்ணினால் எல்லோரும் தின்கிறோம்.'

'நீங்கள் பாட்டுக்கு சொல்லிக்காட்டிண்டேயிருங்கோ, எனக்கு இன்னும் நாலு வயசு போகட்டும். குடும்ப நிர்வாகம் இனிமேல் புதுசா உங்ககிட்ட கத்துக்கறேன்.”

"என்னமா செய்வது? கானோ இளமையில் வறுமை, சிதைவரை அல்பபுத்தி எங்கே விடும்? உங்களுக்கு கொப் புளிக்கப் பன்னீர் என்னால் முடியாததால்தானே வீட்டை விட்டே ஓடி விட்டேன்!'

மூவரும் சற்று நேரம் வாளாவிருந்தோம். பிறகு ளேது, அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சு. ஒரு நாள் சாப்பாட்டுக்கே தக்றார், டி.பனுக்கு ஏது வழி: அவளுக்கு சமைக்க நேரமில்லை. ஆபீஸிலிருந்து திரும்பற வேளைக்கு இரண்டு பேரும் அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிடறோம். அடுத்த நாள் அடிச்சுப் பிடிச்சுண்டு ஒடறோம். இப்படியே பிழைப்பு அயிடுத்து.'

'முடியல்லேன்னா ராஜி வேலைக்கு முழுக்கும் போட்டுவிட வேண்டியது தானே!"

“அதெல்லாம் நடக்கற காரியமில்லேப்பா. எங்கள் தேவைகளும், விலைவாசிகளும், வாழ்க்கை முறையும் அதற்கு இடம் கொடுக்கல்லே. அவளும் ருசி கண்ட பூனை ஆகிவிட்டாள்.'

மறுபடியும் அவரவர் புழுக்கத்தில் அவரவர் மெளனத்தின் தேக்கம்,