பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

லேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைப்பது, வேனும் போது போடுவது, எலெக்ட்ரிக் பில்பற்றி பிள்ளைகளுக்கு என்றுமே கவலை கிடையாது.

ஒரு மூலையில் இரண்டு, மூன்று கிதார்கள், ஒரு ஆர்மோனியம், ஒரு மூலையில் தம்பூரா (எதற்கு?) மேசை மேல் அலங்காரமான அலங்கோலத்தில் புத்த கங்கள்-ஐந்தாறு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஒரு கலில் கிப்ரான் (?) ஒரு ப்ரெஞ்ச் இலக்கணப் புத்தகம் (?) காலைந்து பால்பாயின்ட் பேனாக்கள், ஒரு கறுப்பு மசிக்கூடு, கோல்டுஃபிளேக் சிகரெட்பெட்டி, மேசை மேலே இரண்டு, மூன்று சிகரெட்டுகள் அல்கூதியமாகச் சிதறியிருக்கின்றன-லக்மே கூந்தல் தைலம், இரண்டு, மூன்று லோஷன் பாட்டில்கள், இரண்டு, மூன்று கோட் புத்தகங்கள், ஒரு போட்டோ ஆல்பம், இத்யாதி, இத்யாதி.

திடீரென ஒரு அசதி, சுவரோரமாக விரித்திருந்த பிரம்புப் பாயில், சுவரில் சாய்ந்தபடி சரிந்தேன்.

காசிக்குப்போகும் பிராம்மணனுக்குத் திண்ணையில் சொம்பைப் பற்றிக்கவலை ஏன்? இதையெல்லாம் பார்ப்ப தால்தானே பரிதவிப்பு: .

பார், ஆனால் பட்டுக் கொள்ளதே. படிப்பதைக் கடைப்பிடிப்பது சுலபமாயிருக்கா என்ன? வயது போதா தென்று ஜன்மங்களாக அதற்குத்தானே கொடுத்திருக் கிறது!

கீதை படிக்காமலே பையன்களும் தங்கள் கடத்தையில் அதைத்தான் போதித்துக் காட்டுகிறார்கள்.

கண்ணை மூடிக் கொள்வது ஒரு பயங்கொள்ளித் தனம். ஆகையால் காணத்தான் வேனும், ஆனால், கவனிக்

கே. எ-ே .