பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் தடம்கூட பூரா தன் முயற்சி என்று சொல்வதற் கில்லை. கட்டாயம் தன் வழிக்கு வந்தால் மனதை முறித் தாக வேண்டும் அல்லது மனத்தின் வழிக்கு இடத்தை முறித்தாக வேண்டும். மாறுதலை மனம் ஏற்றுக் கொண்ட துமே, புதுக்கோலத்தில் மனம்படிவதைத் தவிர வேறு வழி: எல்லாமே அவ்வளவுதானே தன்னிரக்கத்தினின்று விடு வித்துக்கொள்ள வேண்டும். அதுவே ஒரு கித்ய சாதகம். பிறகு அவ்வளவு கஷ்டமில்லை.

மற்றும், இருப்பதுதானே மாறி மாறிப் பங்கு சுற்றி வருகிறது! ஒன்று வேனுமானால், வேறு ஒன்றை இழக் கத்தான் வேணும். கிடைப்புக்கும் இழப்புக்கும் வித்யாச எடை தான் தீர்ப்பு, தண்டனை, வெகுமதி எல்லாமே...

உர்ஸ் வருகிறாள்...

கான் ஒவியன் அல்ல. என் கவிதைகளும் சொற்களற்று, நானே மகிழ்ந்து கொள்ளும், உள்ள எழுச்சியின் புனைதல் கள். அவைகளில் அவள் இடம் என்னவென்று எனக்கு இன்னும் கிச்சயமாகவில்லை. அதுவும் பரமபதப்படம் தான். ஒரு சமயம் பெரிய ஏணி, மறு சமயம் பாம்பு. காம் எல்லாருமே ரசாயன முடிச்சுகள். அவ்வப்போது மாறுதல் களுக்கு உட்பட்டவர்கள்.

அரையில் முண்டு, மேலே ரவிக்கை; இடுப்பில் மண் குடம், தோளில் தாழங்குடையுமாய்-கொங்கு காட்டின் தந்தி விலாசம் திடீர் மழை. அழுத குழந்தை சிரிச்சுதாம்; திடீர் மழை பெஞ்சுதாம்; உடனே வெய்யில் காஞ்சுதாம். கன்னத்துக் கண்ணிர் கக்கடகட சிரிப்பில் பப்பளப்பள’ என்கிற மாதிரி-அவள் வருகையில், பி. யு. சி. வரை எட்டிப் பார்த்திருக்கிறாள் என்று யார் நம்புவார்? முதல் பரீட்சையிலேயே கோட்டு' என்று கினைக்கிறேன். அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லையோ. படிப்பில்