பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அல்ல சொல்ல முயல்வதை நம்மவன் எவன் பார்த்திருக் கிறான்? பார்த்தவன் மீள்வானா? எல்லாம் அனு மானத்தோடு சரி. அதிலும் இது எத்தனாவது வண்டலோ? என்னவோ அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக் கிறோம். விட்டுத் தள்ளுங்கோ அப்பா வேறேதேனும் பேசுவோம்-'

'நான் வந்து உங்களுடன் ஒழுங்காகப் பேசக்கூட இல்லை." அவன் கண்கள் என்னத்தையோ தேடி அலைந்தன. எனக்கு அடக்க முடிய வில்லை. 'எனக்காகப் பார்க்கவேண்டாம் ப்ரபு' என்றேன்.

புன்னகை பூத்தான். அதான் பார்த்தேன், இன்னும் வரல்லியேன்னு. எனக்குப் பழக்கம் கிடையாது. உங்க ளுக்கேத் தெரியும்.” -

"அப்புறம் அஞ்சு வருஷம் ஆச்சு அப்பா இப்போ இருக்கக்கூடாதா?’’

'மறுபடியே விட்ட இடத்திலிருந்து அதே தப்பைத் தான் தொடர்கிறோம்.'

'அப்போ' என் கண்கள் வினாவில் மேசைமேல்சிதறியிருக்கும்- தொட்டன.

அது எனக்குமல்ல, என்னுடையதுமல்ல எனக் கெங்கே கட்டுபடியாகும்? நானே நாயுண்ணி மாதிரி என் தம்பியை ஒட்டிக் கொண்டு அவன் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். இது இங்கே ஒத்திகைக்குச் சில சமயங்கள் வந்து ஊதிவிட்டு இங்கேயே மிச்சத்தை உதறி விட்டுப் போகிறான்களே ஒண்னுரெண்டு மைனர்கள், கோஷ்டி சகாக்கள், அவர்களுடைய ப்ரசாதம்! இதுவும் நான் சொல்வது தான். நீங்கள் ஏற்றுக் கொண்டால்