பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வேண்டும். அவன் காலகள் அரித்த பள்ளத்தின் பக்கவாட்டு கள் மதில்களாக அவனைச் சிறை வைத்து விட்டன. ஆந்த மதில்களைத் தகர்த்தெறிய வேண்டும். அதற்கு நீங்கள் பெரியவர்கள் எங்களுக்கு என்ன உதவி செய்யப் போகி நீர்கள்?"

எனக்கு தலை சுற்றுகிறது. இவன் என்னை என்ன வசூல் கேட்கிறான்?

'ப்ரபூ, இந்தச் சக்கர வட்டப்பேச்செல்லாம் விட்டுத் தள்ளு. உன்னுடைய அசல் ப்ரச்னைதான் என்ன?”

அதுவே எங்களுக்குத் தெரிந்தால் தானே! ஒண்ணு தெரிகிறது. எங்கு நான் ஓடினாலும் ஓட்டத்தின் முடிவில் எனக்கு முன்னால் நான் எனக்காகக் காத்திருக்கிறேன். இதற்கு விமோசனம் என்ன?

'ப்ரபூ, ப்ரபூ, ப்-ர-பூ- ஊ ஊ ஊ!'

"கம்மிங் லி.லி...'

என் கைவிரல்களை ஒருதரம் அமுக்கிவிட்டு, என் தைரியத்துக்கு வெளிய்ே சென்றான்.

அப்போ இதுதான் உன் விமோசனம். மத்யான வாய்க் காவில், உண்டையும் உருளையுமாக, வாலும் நீளமுமாக நீரோட்டம் செல்லும் வழியில் மிதந்து செல்லும் மத்தி யானப்பாசி. ஆனால் பேச்சென்னவோ எதிர் நீச்சலைப் பற்றி இவர்களுக்கு மிதக்குமிடம் பாற்கடல் ஒதுங்கிய விடம் உத்தியானவனம். மரத்தடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி எச்சில் உமிழ்வார்கள். இவர் களும் ஒரு விதத்தில் சன்னியாசிகள் தான், பகல் வேவு. சன்னியாசிகள்,