பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

'சி, இதென்ன பேத்தல்?’ பெருமூச்செறிந்தாள். மறுபடியும் கன்னத்தை வருடல். ஜன்னலிலிருந்து (கை மீண்டால்) எட்டிப் பிடிக்க லாம் போல், ரஸகுண்டு போல் வானத்தில் தொங்கிய ஒரு கrத்திரம் சிவந்து தணல் கட்டியாக மாறியது போல் எனக்குத் தோன்றிற்று.

-"மறுபடியும் நமக்கு வாழ்வு கிடைக்குமா?" -'எந்த சினிமா? வயதுக் கேற்ற மாதிரி நடந்து கொள்ள மாட்டோமா?”

"சத்யமா ஹ்ருதயத்திலிருந்து வர வார்த்தை." "இந்த வயசில் வாழ்வென்று என்னிடம் என்ன எதிர் பார்க்கிறாய்?' எனக்கு ஒரு கண் ஜன்னலுக்கு வெளியே தான். பப்பாளிப் பழத்தில் ஏறிய கத்திபோல், கீச்" என்று கூர்ப்பாய், கூம்பியதோர் பகதி சப்தம் வான்மெத்தில் செருகிக் கொண்டது. குன்னக்குடி வயலின் ஸ்ன்னம் போல்... உனக்கு ஒரு ப்ாட்டுத் தெரியுமா? மீசை கரைச்சு போச்சே கிழவா-' முதலடி மட்டும் எடுத்துக் கொடுக்கி றேன். 'பாட்டு ரொம்பப்பழசு. ஆனால் உங்களுக்குப் புதுசு. உங்களுக்குப் பழசெல்லாம் புதுசுதான்.'

"எப்பவும் கேலிதானா?' 'என்னைப் பார்த்தால் கேலி பண்றவன் மாதிரியா யிருக்கு? கடை நாலு அடி கூட ஆகி விட்டால் புறங்கால் அப்பம் கண்டு கொள்கிறது. நாலு படி கூட ஏறினால் மூச்சு இறைக்கிறது.'

"என்னைச் சொல்லிட்டு நீங்கள் இப்போ லிஸ்ட் போடறேளா?”

திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது