பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

- உர்ஸ்'

'அவளுக்கென்ன, அசந்து தூங்கறாள். என்பக்கத்தில் தான் படுத்திருக்காள். நான் நம்மைப்பத்திப் பேசிண்டிருக் தால் அவளைப்பத்தி இப்போ என்ன கினைப்பு?”

'வழியாதே. எனக்குப் பொறுப்பில்லையா? அவளை அவள் வீட்டில் போய் ஒப்படைக்க வேண்டாமா?"

"அப்போ திரும்பிப் போகப் போறேளா?"

‘'சிரிப்பு மூட்டாதே, இதென்ன கழைக் கூத்தாடித் தனம்’’’

'அப்படின்னா புரியல்லியே!'

கழைக் கூத்தாடி மேளம் அடித்துக் கூட்டத்தைக் கூட்டுகிறான். வித்தை காண்பிக்கிறான். வித்தை முடிஞ்சது. வந்தவள் எல்லாம் அவனிடத்திலேயே தங்கிட றாளா? தங்கிட முடியுமா? அதுதான் கழைக் கூத்தாடியின் எண்ணமா? வேடிக்கை பார்க்க வந்தால் எல்லாருமே விரிச்ச துணி மேல் காசைப் போடறாளா?”

செவிகளைப் பொத்திக் கொண்டாள். என்ன கொடுமை, என்ன கொடுமை?”

"என் பாஷை பிடிக்கவில்லை போலும். உடம்பு சுக மில்லையென்று கடிதாசு போட்டு வரவழைத்துவிட்டு, உடனே பிள்ளைக்குக் கலியாணம் என்கிறாய். திரும்பிப் போகப் போறாயா என்று கேட்கிறாய். தோ தோ ன்னா காய்க்குட்டி வரணும், தாதுான்னா காய்க்குட்டி போகனும், வாட் இஸ் திஸ்?' கோணி. ஊசி குடைந்து கொண்டு எனக்கு உச்சி மண்டைக்கு ஏறிற்று.

'உஷ்l-'