பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

“என்னால் அது முடியாத காரியம். உங்களுக்கே தெரியும். உங்கள் மாதிரி கினைச்சுண்டேளா? பாம்பு புத்துக்குள்ளேயே தன் குரோதத்தைத் தவங்கிடக்கே, அது போல-என்ன உடம்பை சிலிர்த்துக்கறேள்?

'- பாம்பு என்றதுமே எனக்கு ஏதோ ஞாபகம் வந்தது. முந்தாநாள் இரவுதான் ஒரு நாகம் பார்த்தேன்-'

'-கடிச்சுடுத்தா?’ திடீரென்று பரபரப்பானாள்.

'கடிச்சுட்டால் உன்னோடு இங்கே இப்போ உதவாக் கரையா-என்னமோ அத்தைக்கு மீசை முளைத்தால் என்ப பதைப்போல-இந்த வெட்டி பேச்சு பேசிண்டிருக்க முடியுமா?’’

ங்ேகள் பாம்பு என்றவுடனேயே பயந்து போயிட் டேன். இப்படித்தான் சில சமயங்களில் அசடாயிடறேன்.”

ஆமாம், சீதை அரண்மனை தாண்டியவுடன் இது தானா ஆரண்யம்னு கேட்டாளாம். அதுபோல ஒரு அசடு. நடிப்புக்கலை நாட்டில் அந்த அளவுக்கு முன்னேறியிருக் கிறது. நாங்கள் அதை மேடையில் மட்டும் கண்டு ரசிச் சோம். அது இப்போ வீட்டுக்குள்ளேயே வந்து விட்டது. இதிலிருந்து நான் தப்பி ஓடினேன். திரும்பி வந்தால் இன்னும் கெட்டியா வேரோடு கூரையைப் பிளந்துண்டு இலையும் கிளையுமா பரவி

"ஆமாம், நீங்கள் பேசறது மட்டும் நாடக பாணியா இல்லையா?”

அவள் சொல்வது சரிதான். மெளனமானோம்.

"நாம் புட்டுக்கணும்.'

'இப்போ என்னவாயிருக்கோம்? ஒற்றுமையாவா இருக்கோம்?”