பக்கம்:கேள்வி நேரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


ராஜேஷ்: எனக்குத் .தெரியும். சிதம்பரம் ஸ்டேடியம்.

பொன்: கரெக்ட். சென்னைப் பல்கலைக் கழகத்திற்குப் பக்கத்திலுள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில்தான் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடைபெறுகின்றன. உலகிலேயே அதிகமான பன்றிகள் உள்ள தேசம் எது?

ராஜேஷ் : சீனாதான்.

பொன் : ராஜேஷ் மிகவும் சரியாகச் சொல்லி விட்டான். சீனா தேசத்தில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை 8 கோடி என்கிறார்கள்!...தமிழ் நாட்டிலே முதல் முதலாகக் கதர் பிரசாரம் செய்தவர் யார்?

கார்த்தியாயினி : ராஜாஜி

பொன் : இல்லை.

பழனி ஈ. வெ. ராமசாமிப் பெரியார்.

பொன் : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே..! இந்தியாவிலே பனை மரங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களைக் கூற முடியுமா?

ராஜாத்தி நமது தமிழ்நாட்டில்தான் நிறையப் பனை மரங்களைப் பார்க்கிறோமே?

பொன் , தமிழ்நாட்டில் மட்டும்தானா? இன்னும் இரண்டு மாநிலங்களிலும் நிறையப் பனை மரங்கள் இருக்கின்றனவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/10&oldid=494363" இலிருந்து மீள்விக்கப்பட்டது