பக்கம்:கேள்வி நேரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


பால: பத்மஜா சொன்னது சரியான விடை. அந்த ஹென்றி ஃபோர்டு, ஃபோர்டு ஃபோர்டு நிறுவனம் (Ford Foundation)என்ற அறநிலையம் ஒன்றை ஏற்படுத்தினார். அந்த அறநிலைய உதவியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென் மொழிகளிலும் நல்ல புத்தகங்களை வெளியிட, சென்னையிலே ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் தெரியுமா?

பத்ம : எனக்குத் தெரியும். அந்த நிறுவனம் வெளியிட்ட பறக்கும் பாப்பா' என்ற புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். அதன் பெயர் தென்மொழிப் புத்தக நிறுவனம் .

பால: ஆம். Southern Languages Book Trust என்பது அதன் ஆங்கிலப் பெயர். கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலமும், விளையாடித் திரிந்த பிருந்தாவனமும் எங்கே இருக்கின்றன?

சுப்பிர : கிண்டியில்.

(மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)

இராஜ : மதுராவில் இருக்கின்றன.

பால: சரியான விடை...உத்தரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் உள்ளது மதுரா"

3085–7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/103&oldid=484682" இலிருந்து மீள்விக்கப்பட்டது