பக்கம்:கேள்வி நேரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


என்ற நகரம். அதை 'வட மதுரை' என்றும் அழைப்பார்கள்.......தமிழ் டிக்க்ஷனரியை அதாவது, அகராதியை முதல் முதலில் தயாரித்தவர் யார் என்று தெரியுமா?

இராஜ: தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர்.

பால: இல்லை.

சுப்பிர : பரமார்த்த குரு என்ற வேடிக்கைக் கதையை எழுதினாரே, அவர் பெயர்.... தொண்டை வரை வந்துவிட்டது....

பால : உம், சீக்கிரம் வாய்க்கு வரவழை,

சுப்பிர: இதோ வரவழைத்து விட்டேன். வீரமா முனிவர்.

பால : சுப்பிரமணியா, சரியாகச் சொன்னாய். இத்தாலி நாட்டைச் சேர்ந்த அவர் தயாரித்த சதுரகராதிதான், பிறகு வெளிவந்த தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடி ... இது வரை உலகிலேயே மிகப் பெரிய பரிசான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர்கள் யார், யார்?

பத்ம : இரவீந்திரநாத தாகூர், சர் சி.வி. ராமன்.

பால : இன்னும் இருவர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் ?

சுப்பிர : எஸ். சந்திரசேகர்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/104&oldid=484683" இலிருந்து மீள்விக்கப்பட்டது