பக்கம்:கேள்வி நேரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


பால: சந்திரசேகருக்கு முன்பு நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ஹரிகோவிந்த் கொரானா. சரி...

...பாம்புகளிலே சிலவற்றுக்கு விஷம் உண்டு. ஆனால், பல பாம்புகளுக்கு விஷம் இல்லை. விஷம் இல்லாத பாம்புகளில் நான்கைச் சொல்ல முடியுமா?

இராஜ : தண்ணிர்ப் பாம்பு, பச்சைப் பாம்பு.

சுப்பிர: கட்டுவிரியன்.

பால : ஐயோ, அது பொல்லாத விஷப் பாம்பு! கேட்டது விஷம் இல்லாத பாம்புகளை. இராஜலெட்சுமி இரண்டு பாம்புகளின் பெயர் களைச் சரியாகச் சொன்னாள். இன்னும் இரண்டு?

பத்ம: சாரைப் பாம்பு...மலைப் பாம்பு.

பால : ரொம்ப கரெக்ட் ... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாருக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?

சுப்பிர : கனக சுப்புரத்தினம்.

பால: சரியான விடை......'அம்பர்' என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து கிடைக்கிறது?

இராஜ : ஒருவித மரத்திலிருந்து.

பால : இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/105&oldid=484684" இலிருந்து மீள்விக்கப்பட்டது