பக்கம்:கேள்வி நேரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


சுப்பிர : பூக்களிலிருந்து.

பால: தவறு

பத்ம: தெரியவில்லை

பால: நானே சொல்லிவிடுகிறேன். திமிங்கிலத்தின் குடலிலிருந்துதான் அம்பர் எடுக்கப் படுகிறது...சரி, சுங்க வரி' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?

இராஜ: வெளி நாடுகளிலிருந்து டி. வி., டிரான் சிஸ்டர், கடிகாரம், காமிரா-இப்படிச் சில பொருள்களைக் கொண்டு வரும்போது, அவற்றிற்கு வரி விதிக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் சுங்க வரி.

பால : இராஜலெட்சுமி, நீ சொன்னது ஓரளவு சரிதான். ஆனால், வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் சில பொருள்களுக்கு மட்டுமல்ல; நம் நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில பொருள் களுக்கும் வரி விதிக்கிறார்கள். அதுவும் சுங்க வரிதான் ... பெரிய கோயில்களில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களைப் பார்த் திருப்பீாகள். அவர்களில் பெண்கள் யார் யார் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/106&oldid=484685" இலிருந்து மீள்விக்கப்பட்டது