பக்கம்:கேள்வி நேரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


ராஜேஸ்வரி : இராமர் வனவாசம் போனபோது அவருக்குத் தோழனாக வந்தானே, அவனைத் தான் குறிக்கும்.

சுப்பிரமணியம் : முருகக் கடவுளுக்கும் குகன்' என்று ஒரு பெயர் உண்டல்லவா?

சூடாமணி: ஆம். குகன் என்பது இருவரையுமே குறிக்கும் பெயர்தான். இராமர், தன் தம்பியாகக் குகனை ஏற்றுக்கொண்டதை இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். அடியார்களின் உள்ளம் என்னும் குகையில் முருகன் வசிப்பதால் குகன்' என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு...சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரைப் போல் 39 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு தமிழ்க் கவிஞரின் பெயர் தெரியுமா?

ஆனந்த் : மகாகவி பாரதியார்.

சூடாமணி : சரியான பதில், நமக்கு மூன்று விதமான பற்கள் இருக்கின்றன. என்ன என்ன வகைப் பற்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/111&oldid=484689" இலிருந்து மீள்விக்கப்பட்டது