பக்கம்:கேள்வி நேரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


சீதாராமன் : வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், இன்னொன்று ..கடைவாய்ப் பற்கள்.

சூடாமணி : கரெக்ட். உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு வெட்டும் பற்கள்; கிழிப்பதற்குக் கோரைப் பற்கள்; அரைப்பதற்குக் கடைவாய்ப் பற்கள்...எல்லா மிருகங்களையும் விட, உடம்பிலே கொழுப்பு அதிகமாக உள்ள மிருகம் எது?

ஆனந்த்: யானை.

சூடாமணி: தவறு.

குமார் : காண்டாமிருகம்.

சூடாமணி : அதுவும் இல்லை.

சீதாராமன் : பன்றி.

சூடாமணி : சரியான விடை. பன்றியின் எடையில் பாதி கொழுப்பாக இருக்கும். அதை உருக்கிச் சுத்தம் செய்து நெய்போலப் பயன்படுத்துகிறார்கள்...இயேசு கிறிஸ்துவுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் தெரியுமா?

சுப்பிரமணியம் : யோசுவா.

சூடாமணி : ரொம்ப கரெக்ட். அதையே கிரேக்க மொழியில் ஏசு என்றார்கள்...நீர் யானைகள் இப்போது எந்த எந்தக் கண்டங்களில் வாழ்கின்றன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/112&oldid=484690" இலிருந்து மீள்விக்கப்பட்டது