பக்கம்:கேள்வி நேரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


சூடாமணி : அதன் ஆசிரியரா யிருந்தவர்தான் தமிழ்வாணன் அவர்கள். நடத்தியவர் : அணில் அண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தவை. கோவிந்தன் அவர்கள். வை.கோ. என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும், புத்தகங்கள் வெளியிடுவதில் பல புதுமை களைச் செய்தவர். பல எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் தோன்ற மிகவும் உதவியவர்.ஜோக் நீர் வீழ்ச்சிக்கு இன்னொரு பெயர் உண்டு. என்ன பெயர் தெரியுமா?

ஆனந்த் : ஜெர்சாப்பா நீர்வீழ்ச்சி.

சூடாமணி : கரெக்ட் பாரதியார் பாரதத் தாயைப் பற்றிப் பாடும்போது முப்பது கோடி முகமுடையாள் எங்கள் தாய் என்று பாடினார். அவர் காலத்தில் 30 கோடி மக்கள்தான் நம் தேசத்தில் இருந்தார்கள். இப்போது இந்திய மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியுமா?

குமார் 50 கோடி.

சீதாராமன் இல்லை : நான் சொல்கிறேன் 60 கோடி. -

சூடாமணி : 74 கோடியையும் தாண்டிவிட்டது. சுமார் 74 கோடியே 63 லட்சம்..இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதில் 5ல் 2 பங்கு மணல் வெளியாகவே அதாவது, பாலைவன மாகவே இருக்கிறது. அது எந்த மாநிலம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/114&oldid=484692" இலிருந்து மீள்விக்கப்பட்டது