பக்கம்:கேள்வி நேரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


ஆனந்த்: டில்லியில், சூடாமணி இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

மற்றவர்கள் : (மெளனம்)

சூடாமணி : நானேதான் சொல்லவேண்டுமா? சென்னையில்தான் முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது. முதல் முதலாக நகராட்சி அமைக்கப்பட்டதும் சென்னை நகரில்தான்.சென்னையின் முதல் மேயர் யார் தெரியுமா?

குமார் : தெரியும். செட்டி நாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார்.

சூடாமணி: கரெக்ட்...திருவருட்பா என்ற நூலை இயற்றியவர் யார்?

குமார் : சேக்கிழார்.

சூடாமணி : சேக்கிழார் இயற்றியது பெரிய புரணம்'...வேறு யாருக்காவது தெரியுமா?

ஆனந்த் : நான் சொல்கிறேன். இராமலிங்க அடிகளார்.

சூடாமணி: சரியான பதில் ... 1983-ல் உலகத் திலேயே மிகப் பெரிய பரிசாகிய நோபல் பரிசை நம் நாட்டு விஞ்ஞானி பெற்றிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/117&oldid=484695" இலிருந்து மீள்விக்கப்பட்டது