பக்கம்:கேள்வி நேரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


ராஜேஸ்வரி : தெரியும். எஸ். சந்திரசேகர்.

சூடாமணி: சரியாகச் சொன்னாய். இவருக்கு ஏற்கெனவே நோபல் பரிசு பெற்ற ஒருவர் உறவினர். அவர் யார்?

குமார் : சர். சி. வி. ராமன்தானே?

சூடாமணி: ஆம், இவருடைய தந்தையின் சகோதரர்தான் சர். சி. வி. ராமன். அவரும் இவரைப் போல் பெளதிகத் துறையில்தான் பரிசு பெற்றார்...உலகின் பல்வேறு நாடு களில் ஒலிம்பிக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன என்பதும் அதில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்பது தெரியுமா?

ஆனந்த்: ஒவ்வோராண்டும்தானே? சூடாமணி : இல்லை.

சீதாராமன் : 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

சூடாமணி : ஆம், சரியான விடை... மீனும் பாம்பும் தூங்கும்போது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகின்றன. ஏன் அவை நம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு தூங்குவதில்லை?

ஆனந்த் : அவைகளுக்குத்தான் கண் இமைகள் இல்லையே! எப்படி மூடும்?

சூடாமணி : சபாஷ்! சரியான பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/118&oldid=484697" இலிருந்து மீள்விக்கப்பட்டது