பக்கம்:கேள்வி நேரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது, "நாங்கள் ஆங்கிலேயரிடத்தில் பிச்சை கேட்கவில்லை; உரிமையைத்தான் கேட்கிறோம்” என்று முழங்கினார். பழைய டில்லியில் யமுனை ஆற்றங்கரையில் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. அதன் அருகிலே வேறு இரு தலைவர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அந்தத் தலைவர்கள் யார், யார்?

பழனி: நேரு மாமா, இன்னொருவர்...

ராஜாத்தி : லால் பகதூர் சாஸ்திரி.

பொன்: இருவரும் சேர்ந்து சரியான விடையளித்து விட்டீர்கள். குடல் காய்ச்சல்” என்றால் என்ன?

பழனி: என்ன! குடல் காய்ச்சலா!

பொன்: ஆம், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அப்படித்தான் சொல்கிறார்கள். குடலை அதிகமாகப் பாதிக்கும் காய்ச்சலாதலால்...

ராஜாத்தி: தெரியும், தெரியும். டைபாய்டு காய்ச்சல்தான்.

பொன் : ரொம்ப சரி, உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?

பழனி : ஜப்பானில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/12&oldid=494365" இலிருந்து மீள்விக்கப்பட்டது