பக்கம்:கேள்வி நேரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


என்ன என்று சிறிது விளக்கமாகக் கூற முடியுமா?

பமீலா : நான் கூறுகிறேன். ரஷ்யக் குழு ஒன்று சென்னைக்கு வந்து பாலே நடனம் நடத்தியது. அதில் யாருமே பாடவும் இல்லை; பேசவும் இல்லை. பின்னணி இசைக்குத் தக்கபடி ஆடினார்கள். அபிநயம் மூலமாகவே ஒரு கதையைத் தெரிவித்தார்கள்.

பத்மா : அடடே, மிகவும் நன்றாகக் கூறி விட்டாயே! பின்னணி இசையுடன் அபிநயம் மூலமே ஒரு கதையை உணர்த்தும் ஒருவகை மேல்நாட்டு நடனமே பாலே என்பது... இந்தியாவில் வெளியான முதல் செய்தித் தாள் எது?

வரத : வங்காள கெஜெட்,

பத்மா : கரெக்ட். 1780-ல் அது கல்கத்தாவிலிருந்து வெளி வந்தது. பர்மா நாட்டின் தலைநகரம் எது?

பிரபா : ரங்கூன்.

பத்மா : சரியான விடை. ஐக்கிய அமெரிக்க நாடு களின் தலைநகரமாக இப்போது வாஷிங்டன் இருக்கிறது. இதற்கு முந்தி எது தலைநகரமாக இருந்தது!

பிரபா : நியூயார்க் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/121&oldid=484699" இலிருந்து மீள்விக்கப்பட்டது