பக்கம்:கேள்வி நேரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


பத்மா: ரொம்ப சரி. டென்னிஸ் எந்த நாட்டில் தோன்றிய விளையாட்டு?

பிரபா : இங்கிலாந்தில்.

பத்மா: ஆம் ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகே, இங்கும் இந்த விளையாட்டு பரவியது . தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஊரில் இருக்கிறது?

வரத: தஞ்சாவூரில். பத்மா : சரி, உலகத்திலே மிகவும் உயரத்தில் இருக்கின்ற நாடு எது?

வரத: சிம்லா.

பத்மா தவறு. நான் கேட்டது எந்த நாடு என்று?

பமீலா : திபேத்து.

பத்மா : கரெக்ட். அதனால்தான் அதை 'உலகத்தின் கூரை" என்கிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர் யார்?

வரத: அப்பர்.

பிரபா: இல்லை. திருநாவுக்கரசர்.

பத்மா : இருவர் கூறியதும் சரியே. திருநாவுக் கரசரைத்தான் அப்பர் என்றும் அழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/123&oldid=484701" இலிருந்து மீள்விக்கப்பட்டது