பக்கம்:கேள்வி நேரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


அவரது தாயார், அவரை சாமிநாதன் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இதோ இந்தப் படத்திலிருக்கும் பறவையின் பெயர் என்ன, தெரியுமா?

(படம்)

பிரபா : நீர் வாத்து.

பத்மா : இல்லை.

பமீலா : எனக்குத் தெரியும். பாம்புத் தாரா.

பத்மா: சரியான விடை. இது தண்ணிரில் நீங்தும்போது இதன் தலையும் கழுத்தும் மட்டுமே வெளியில் தெரியும். துரத்திலிருந்து பார்த்தால் பாம்பு நீந்துவது போல் இருக்கும். துருவ நட்சத்திரத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன?

வரத: எல்லா நட்சத்திரங்களும் நகரும். துருவ நட்சத்திரம் மட்டும் நகராமலே இருக்கும்.

பிரபா : இல்லை. நான் சொல்கிறேன். துருவ நட்சத்திரம் சூரியனைப்போல் 4000 மடங்கு ஒளி உடையது என்று நான் படித்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/126&oldid=484704" இலிருந்து மீள்விக்கப்பட்டது