பக்கம்:கேள்வி நேரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


பத்மா : இருவர் சொன்னதும் சரியே. துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் இருப்பதால், அதை வைத்தே மாலுமிகள் அக்காலத்தில் திசையைத் தெரிந்து கொள்வார்கள். இப்போதுதான் திசை காட்டும் கருவி வந்து விட்டதே! சூரியனைப் போல் 4000 மடங்கு, ஒளி இருந்தாலும், அது சூரியனை விட வெகு தூரத்தில் இருப்பதால், ஒளி நமக்கு அதிக மாகத் தெரிவதில்லை. தனக்கு உதவி செய்த வருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி' என்று திட்டுகிறார்களே, புல்லுருவி என்றால் என்ன ?

பமீலா . அது ஒரு செடி.

பத்மா : அது சரி. அதன் குணம் என்ன?

எல்லாரும் : (மெளனம்).

பத்மா : இந்தச் செடி ஏதேனும் ஒரு மரக்கிளையில் வேரை ஊன்றிக் கொண்டு, அங்கேயே வளரும். அதிலிருந்து பல பக்க வேர்கள் மரத்துக்குள்ளே செல்லும் அந்த மரத்திலுள்ள சத்துப் பொருள்களை இந்தச் செடி உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அந்த மரத்திற்கே கெடுதல் செய்யும். வளர இடம் கொடுத்த மரத்திற்கே கேடு செய்யும். அதனால்தான் உதவியவருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி என்கிறார்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/127&oldid=484705" இலிருந்து மீள்விக்கப்பட்டது