பக்கம்:கேள்வி நேரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


மதுரையைத் தலைநகராக வைத்து அரசாண்டு புகழ்பெற்றார் ஒர் அரசி. அவர் பெயர் தெரியுமா?

பமீலா : மங்கம்மாள்.

பத்மா: அடே, பமீலா சரியாகச் சொல்லி விட்டாளே! இரண்டாம் சொக்கநாதர் என்ற தன் பேரனுக்குக் காப்பாளராக இருந்து 17 ஆண்டுகள் திறமையாக ஆண்டவர் மங்கம்மாள்...கரும்பு அதிகமாக விளையும் நாடு எது?

பிரபா : நம் இந்தியாதான்.

பத்மா : கரெக்ட். கியூபா, பிரேசில், ஹாவாய், ஜாவா ஆகிய இடங்களிலும் கரும்பு விளைகிறது. இருந்தாலும் நம் நாட்டில்தான் அதிகம்...காஞ்சிபுரத்தில் நிறைய கோயில்கள் இ ரு ப் ப த க க் கேள்விப்பட்டிருப்பீர்கள். மொத்தம் எத்தனை கோயில்கள் என்று தெரியுமா?

வரத : 75.

பத்மா: என்ன, 50 கோயில்களைக் குறைத்துச் சொல்கிறாயே! மொத்தம் 125 கோயில்கள் அங்கு இருக்கின்றன. இவற்றில் 40 கோயில்கள் பெரியகோயில்கள். சரி. இப்போது ஒரு விடுகதை. விடுவியுங்கள்; பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/128&oldid=484706" இலிருந்து மீள்விக்கப்பட்டது