பக்கம்:கேள்வி நேரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


பிரபா : 21 வயதானவர்கள்.

பத்மா . இது முதல் கேள்விக்கு விடையா இரண்டாம் கேள்விக்கு விடையா?

பிரபா : இரண்டுக்கும்தான்.

பத்மா : முதல் கேள்விக்கு விடை-21வயது. சரிதான். இரண்டாவது கேள்விக்கு 25வயது என்பதுதான் சரி. முப்பழம்' என்கிறார்களே, அவை எந்த எந்தப் பழங்கள்?

பமீலா: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்.

பத்மா : ஆம். மா, பலா, வாழை என்பார்கள். நத்தைக்கு எத்தனை கொம்புகள்?

வரத : கொம்புகளா? (எல்லாரும் சிரிக்கிறார்கள்).

பத்மா : ஆம், அவற்றை உணர் கொம்புகள் என்பார்கள்.

வரத: இரண்டு கொம்புகள்.

பத்மா: ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்புகள்தான். ஆனால், நத்தைக்கு கொம்புகள்! இரண்டு நீளமாக இருக்கும் இரண்டு குட்டையாக இருக்கும். ஒவ்வொரு நெட்டைக் கொம்பின் உச்சியிலும் கறுப்பாக புள்ளி போல் இருக்குமே, அதுதான் அதன் கண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/130&oldid=484708" இலிருந்து மீள்விக்கப்பட்டது