பக்கம்:கேள்வி நேரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


ஒன்பதாவது ஏஷியாட்டில் இந்தியா பெற்ற மொத்தப் பதக்கங்கள் எத்தனை?

பழனி : தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் இரண்டையும் சேர்த்துச் சொல்ல வேனுமா?

பொன் : வெண்கலப் பதக்கத்தை விட்டு விடலாமா? தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையும் சேர்த்துச் சொல்லுங்கள்

பழனி : தங்கப் பதக்கங்கள் 13 வெள்ளி 19, வெண்கலம் 25. ஆக மொத்தம் 57.

பொன்: அடே! இல்வளவு சரியாகச் சொல்கிறாயே! சரி. ஆடிப்பெருக்கு என்கிறார்களே, அதுபற்றித் தெரியுமா?

ராஜாத்தி : ஆடிமாதம் முதல் முதலாக ஆறுகளில் நீர் பெருகி வருமே, அதைத்தான் ஆடிப் பெருக்கு என்கிறார்கள் . பொன் : ஆமாம். ஆடி 18-ம் தேதி அதை விழாவாகக் கொண்டாடுவதால், பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்... மகா பாரதத்தை முதன் முதலில் யார் எந்த மொழியில் எழுதினார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/14&oldid=494367" இலிருந்து மீள்விக்கப்பட்டது