பக்கம்:கேள்வி நேரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


இரவிலே ஒரு சிறுவன் விளக்கில்லாமல் சைக்கிளில் செல்கிறான். எதிரே ஒருவர் ஒற்றை மாட்டு வண்டியை மிக மெதுவாக ஒட்டி வருகிறார். வேறு ஆட்களோ, கார், வண்டிகளோ அந்தச் சாலையில் இல்லை. இருட்டிலே எதிரே வண்டி வருவது தெரியாமல் அவன் சைக்கிளை ஒட்டிச் செல்கிறான். நல்ல வேளையாக, வண்டிக்குச் சிறிது துரத்தில் செல்லும்போதே, மாட்டின் கண்களில் பளபள என்ற ஒளி தெரிகிறது. அதைக் கண்டு, அவன் சைக்கிளை ஒர் ஒரமாக ஒட்டித் தப்பித்துக் கொள்கிறான் 'இப்படி அவர் எழுதியிருப்பதில் ஒரு தவறு. இருக்கிறது. கண்டுபிடிக்க முடியுமா?

பழனி: இருட்டிலே மாட்டின் கண்களிலே எப்படி ஒளி தெரியும்? அதன் முகத்திலே ஒளி பட்டால்தானே, கண் பளபளப்பாகத் தெரியும்? அங்குதான் வெளிச்சம் படுவதற்கு வழியே இல்லைய

பொன்: அடேடே! மிகவும் நன்றாகச் சொன்னாய். இரவிலே மாட்டின் கண்களில் தானாக ஒளி தெரியாது. ஏதேனும் வெளிச்சம் பட்டால், பளபளப்பான அதன் கண்களில் ஒளி பிரதிபலிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/16&oldid=494373" இலிருந்து மீள்விக்கப்பட்டது