பக்கம்:கேள்வி நேரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


உமா: இப்போ உங்களை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். எங்கே சரியான பதில் சொல்லுங்க, பார்க்கலாம். கப் அண்ட் சாசரிலே கப் இருக்குதே- அதுதான் கோப்பை- அதன் கைப்பிடி எந்தப் பக்கம் இருக்கும் ?

விஜி : வலது பக்கம்.

கனகசபை இல்லை, இடது பக்கம்.

யாழினி : இரண்டும் தப்பு. வெளிப் பக்கம் தான் இருக்கும்.

உமா : யாழினி. வெளிப் பக்கம்னு நீ சொன்னது தான் சரி. கோப்பையை வலது பக்கமாய்ப் பிடித்தால், கைப் பிடி வலப் பக்கம் இருக்கும் இடது பக்கமாய்ப் பிடித்தால், இடப் பக்கம் இருக்கும். அதனாலே, யாழினி வெளிப் பக்கம்னு சொன்னதுதான் சரி. விஜி, நீ கிளி பார்த்திருக்கிறாயா?

விஜி: ஓ! பார்த்திருக்கிறேனே!

உமா: எங்கே பார்த்திருக்கிறாய்?

விஜி : மரத்தடியிலே கிளி ஜோஸ்யம் சொல்றாரே அவருக்கிட்டே பார்த்திருக்கிறேன்.

உமா: சரி, கிளியினுடைய ஒரு காலில் எத்தனை விரல்கள் இருக்கும்?

விஜி: அஞ்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/18&oldid=494375" இலிருந்து மீள்விக்கப்பட்டது