பக்கம்:கேள்வி நேரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


உமா: தப்பு.

யாழினி : நாலு,

உமா : அதுவும் இல்லேன்னா மூனுன்னு சொல்லுவீங்க. ஆனால், நாலுங்கிறதுதான் சரி... போகட்டும். அந்த நாலு விரல்களிலே முன்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்? பின்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்”

விஜி: முன்னாலே ஒண்னு. பின்னாலே முணு. . உமா: தப்பு, தப்பு.

யாழினி: நான் சொல்லட்டுமா? முன்னாலே மூணு பின்னாலே ஒண்ணு.

உமா : யாழினி, நீ சொன்னதும் தப்பு. நானே சொல்லிவிடுகிறேன். முன்னாலே இரண்டு; பின்னாலே இரண்டு விரல்களிருக்கும்... விஜி, இன்னொரு தடவை கிளி ஜோஸ்யர்கிட்டே போய் நல்லாப் பார்த்துட்டு வா. (எல்லோரும் சிரிக்கிறார்கள்)

உமா: இன்னொரு கேள்வி. TABLE நடுவே என்ன இருக்கும்?

விஜி : புத்தகம்.

உமா: இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/19&oldid=484605" இலிருந்து மீள்விக்கப்பட்டது