பக்கம்:கேள்வி நேரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


கனகசபை: வளர்பிறையாக இருந்தால், கீழே இருந்து மேல் பக்கமா படகு போல் வளைஞ் சிருக்கும். தேய்பிறையாக இருந்தால் மேல் பக்கத்திலே யிருந்து கீழ்ப்பக்கமா குடை போல் வளைஞ்சு இருக்கும்.

உமா: அடே, கனகசபை உடனே சொல்லிட்டானே! கெட்டிக்காரன்! இப்போது ஒரு கணக்கு. 6 மணி அடிக்க 30 விநாடிகள் ஆகுது. 12 மணி அடிக்க எத்தனை விகாடிகள் ஆகும்?

யாழினி: : 60 விநாடிகள்.

உமா: இல்லை.

விஜி : 63 விநாடிகள்

உமா : கனகசபை, உனக்குத் தெரியுமா ?

கனகசபை: நீங்களே சொல்லிடுங்க அக்கா, உமா: ஒன்றுக்கும் ஆறுக்கும் உள்ள இடை வெளிகள் ஐந்து. ஐந்து இடை வெளிகளுக்கு 30 விநாடிகள் என்றால் ஒரு இடைவெளிக்கு எத்தனை விநாடிகள்?

விஜி: ஆறு விநாடிகள்.

உமா : அதே போலத்தானே ஒன்றுக்கும் 12க்கும் உள்ள இடைவெளிகளைத் தெரிந்து கொண்டு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/21&oldid=484607" இலிருந்து மீள்விக்கப்பட்டது