பக்கம்:கேள்வி நேரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


விஜி: பாரதியார் கவிதைகள்.

உமா: இல்லை.

யாழினி : பாப்பாப் பாட்டு

உமா : அது புத்தகம் இல்லையே! அது ஒரு பாட்டுத்தான். அது 1915-ல் ஞானபானு என்ற இதழில் வெளிவந்தது. ஆனால், முதல் முதலாக வெளிவந்த பாரதியார் புத்தகம் 1908-ல் வெளிவந்தது. யாருக்குத் தெரியும் ?

எல்லாரும் : (மெளனம்)

உமா : சரி நானே சொல்லிவிடுகிறேன். ‘ஸ்வதேச கீதங்கள்’ என்பதுதான் அவரது முதல் புத்தகம், வந்தே மாதரம், மன்னும் இமயமலை, எந்தையும் தாயும், வாழிய செந்தமிழ், என்ற 14 பாடல்களைக் கொண்டது அந்தப் புத்தகம். சரி விஜி, ஆறுகளே இல்லாத நாடு எது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/24&oldid=494067" இலிருந்து மீள்விக்கப்பட்டது