பக்கம்:கேள்வி நேரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


புறமும் கடல் சூழ்ந்திருக்கும். ஆனால், ஆறு களே இல்லை... இப்போது அடுத்த கேள்வி. தாஜ் மஹாலைக் கட்டியவர் யார் ?

கனகசபை: கொத்தனார்கள்.

(விஜியும் யாழினியும் சிரிக்கிறார்கள்)

உமா : சிரிக்காதீர்கள், கனகசபை சொன்னதும் ஒரு வகையில் சரிதான். கட்டியவர் யார்?" என்று கேட்கக் கூடாது. கட்டுவித்தவர் யார்?' என்றுதான் கேட்க வேண்டும். சரி, தாஜ் மஹாலைக் கட்டுவித்தவர் யார் ?

யாழினி: ஷாஜஹான்.

உமா: ஆம், ஷாஜஹான்தான். ஷாஜஹானாபாத் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

கனகசபை : பகாளாபாத் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஷாஜஹானாபாத். ஏதாவது சாப்பிடுகிற சமாச்சாரமோ?

உமா : யாருக்கும் தெரியாதா? நானே சொல்லி விடுகிறேன். பழைய தில்லி நகரத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/26&oldid=484612" இலிருந்து மீள்விக்கப்பட்டது