பக்கம்:கேள்வி நேரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


ஷாஜஹானாபாத் என்ற ஒரு பெயரும் உண்டு அதை உருவாக்கியவர், தாஜ்மஹாலைக் கட்டுவித்த அதே வடிாஜஹான்தான். கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர எத்தனை நாட்களாகும் ?

விஜி : 21 நாட்கள்.

உமா: சரியான விடை... கோழி அடை காக்காமலே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஒரு கருவி இருக்கிறது. அதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

யாழினி : நான் பார்த்திருக்கிறேன்.

கனகசபை : நானும்தான் ஒரு கோழி ப் பண்ணையில் பார்த்திருக்கிறேன். அதற்கு ஏதோ பெயர் சொன்னார்களே... உம், உம்... நினைவுக்கு வந்து விட்டது. incubator.

உமா : அடே, நல்லா ஞாபகம் வைத்திருக்கிறாயே! அடை காக்கும் பெட்டி என்று அதைத் தமிழில் சொல்லுவார்கள். அதில் மூட்டைகளை வைத்தால் எத்தனை நாட்களிலே குஞ்சு வெளி வரும், தெரியுமா?

விஜி : 21 மணி நேரத்தில்.

கனகசபை: இல்லை. அதுவும் 21 நாட்களில் தான் வெளிவரும்.

உமா : கனகசபை, நீ சொன்னதுதான் சரி. கோழி அடைகாத்தாலும் 21 நாட்கள்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/27&oldid=484613" இலிருந்து மீள்விக்கப்பட்டது