பக்கம்:கேள்வி நேரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


கண்ணன் வேஷம் போட்டு ஆடிப் பாடியிருக்கிறேன். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா இயற்றியதுதான் இந்தப் பாடல்.

உமா : யாழினி கூறியதே சரி. இவ்வளவு நேரமாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உங்களைச் சரியான விடை சொல்லச் சொன்னேன். ஆனால், இப்போது நான் நாலு கேள்விகள் கேட்பேன். நாலுக்கும் சரியான விடை சொல்லக்கூடாது. தப்பு தப்பா விடை சொல்லனும். எங்கே விஜி, நீயே நாலு கேள்விகளுக்கும் விடை சொல்லு. காக்கையின் நிறம் என்ன?

விஜி : சிகப்பு.

உமா : தமிழ் நாட்டின் தலைநகரம் எது?

விஜி : முடுக்குப்பட்டி,

உமா : நேரு மாமா எந்த ஊரிலே பிறந்தார்?

விஜி: அண்ணா நகரிலே.

உமா: சரி, இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்?

விஜி : மூனு.

உமா : ஐயையோ! தோத்துப் போயிட்டியே!

விஜி : என்ன, தோத்துப் போனேனா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/31&oldid=484617" இலிருந்து மீள்விக்கப்பட்டது