பக்கம்:கேள்வி நேரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


பிரீதி : இல்லை.

சரளா : பிறகு ஏன் அவர்களைச் செவ்விந்தி யர்கள் என்று அழைக்கிறார்கள்?

பிரீதி : நான் படித்திருக்கிறேன். இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கக் கடலிலே சென்றாரே கொலம்பஸ், அவர் அமெரிக்காவின் கரையைக் கண்டதும், அதுதான் இந்தியா என்று நினைத்து விட்டாராம்! உடனே, அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு இந்தியர்கள்’ என்று பெயரும் வைத்து விட்டாராம்.

சரளா: நன்றாக, விளக்கமாகச் சொன்னாய். அதுமுதல் அந்த மக்களை ‘செவ்விந்தியர்’ என்றும், ‘அமெரிக்க இந்தியர்கள்’ என்றும் அழைத்து வருகிறார்கள்... ‘கஸ்தூரி’ என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து எப்படிக்கிடைக்கிறது?

கிரி: கஸ்தூரி மானிடமிருந்து கிடைக்கிறது,

சரளா: அதுசரி, எப்படி அதனிடமிருந்து கிடைக்கிறது என்பதற்குப் பதில் சொல்ல வில்லையே?

கிரி : மானின் அடி வயிற்றுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்துதான் ‘கஸ்தூரி’யை எடுக்கிறார்கள்.

சரளா : ரொம்ப சரி, ஆங்தையால் மனிதருக்கு நன்மையா? தீமையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/39&oldid=494069" இலிருந்து மீள்விக்கப்பட்டது