பக்கம்:கேள்வி நேரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


நமக்கு இடதுபுறம் உள்ளது மத்தியப் பிரதேசம். வலது புறம் உள்ளது மேற்கு வங்காளம். நடுவே இருக்கும் மாநிலம் எது?

எல்லாரும் : ஒரிசா.

சரளா: அடே, எல்லாரும் புவி இயலில் கெட்டிக் காரர்கள்போல் தெரிகிறதே! அடுத்த கேள்வி. இராஜபாளையத்தில் பிறந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

கிரி : குமாரசாமி ராஜா.

சரளா: சரியான விடை அவர் தமது பெரிய வீட்டையே பொது மக்களுக்குக் கொடுத்து விட்டார். காந்தி கலைமன்றம்' என்ற பெயரால் இப்போது அது வழங்கப்படுகிறது. காந்திஜிக்கு மிகவும் பிரியமான பாட்டு எது, தெரியுமா?

பிரீதி : வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே’ என்று ஆரம்பமாகுமே, அந்தப் பாட்டுத்தான். சரளா சரியாகச் சொன்னாய்! இந்தப் பாட்டை எழுதியவர் யாரென்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்). சரளா பதினைந்தாம் நூற்றாண்டிலே குஜராத்தில் வாழ்ந்த நரசிம்ம மேத்தா என்ற தெய்வீகக் கவிஞர்தான் இதை இயற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/41&oldid=484626" இலிருந்து மீள்விக்கப்பட்டது