பக்கம்:கேள்வி நேரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


காந்திஜியின் உயர்ந்த கொள்கைகளெல்லாம் அந்தப் பாடலிலே இருந்ததால், காந்திஜியை அது மிகவும் கவர்ந்துவிட்டது. பொய்க்கால் குதிரையாட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ் நாட்டைத் தவிர வேறு. எங்கேயாவது இந்த ஆட்டம் இருக்கிறதா?

பிரீதி : டில்லியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்ததாம். பத்திரிகையிலே படித்தேன்.

பிரின்ஸ் : பெங்களுரில்கூட இந்த ஆட்டம் இருக்கிறதாக என் மாமா சொன்னார்.

சரளா: தமிழ்நாட்டிலிருந்துதான் அங்கெல்லாம் போயிருக்கிறது. இந்த ஆட்டம் நம் தமிழ் நாட்டுக்கே உரியது. ......'மைதிலி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிரிதி : என் சிநேகிதி ஒருத்திக்குக்கூட அந்தப்பெயர்தான்.

சரளா: நான் சொல்வது ஒரு பெண்ணின் பெயரல்ல; ஒரு மொழியின் பெயர். அது பீகார் மாநிலத்திலே மிதிலைப் பகுதியிலே பேசப்படுகிறது. வடஇந்தியாவிலே முதல் முதலாக, பைபிளை மொழி பெயர்த்தது இந்த மைதிலி மொழியில்தானாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/42&oldid=484627" இலிருந்து மீள்விக்கப்பட்டது