பக்கம்:கேள்வி நேரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


முத்து : அண்ணா! நான் சொல்கிறேன். அப்பர், சுந்தரர், மாணிக் கவாசகர், அப்புறம், அப்புறம்...

தங்கம் : இன்னொருவர் பெயர் எனக்குத் தெரியும், அவர்தான் திருநாவுக்கரசர்.

சிவம் : தப்பு. அப்பரும் திருநாவுக்கரசரும் ஒருவரேதான். ஜோதி, உனக்குத் தெரியுமா?

முத்து : நானே சொல்லிவிடுகிறேன். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்.

சிவம்: சரியாகச் சொல்லிவிட்டாய், ஆமாம், திருநாவுக்கரசருக்கு அப்பர்' என்ற பெயர் எப்படி வந்தது? உங்களில் யாருக்காவது தெரியுமா?

மூவரும் : தெரியாது அண்ணா. நீங்களே சொல்லி விடுங்கள்.

சிவம் : சீர்காழிக்குப் போய்த் திருஞான சம்பந்தரைத் திருநாவுக்கரசர் சந்தித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/46&oldid=484630" இலிருந்து மீள்விக்கப்பட்டது