பக்கம்:கேள்வி நேரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


தங்கம் : நெருப்புக் கோழி.

சிவம் : அதுவும் இல்லை.

ஜோதி : எனக்குத் தெரியும். பெங்குவின்.

சிவம் : கரெக்ட். ஆண் பெங்குவின் எட்டு வாரங்கள் எதுவுமே சாப்பிடாமல் அடை காக்கும்.

அடுத்ததாக ஒரு கேள்வி. மக்கா, மதினா என்ற இரு நகரங்களும் எந்த எந்த நாட்டில் உள்ளன? ஏன் அவற்றைப் புண்ணிய நகரங் களாகக் கருதுகிறார்கள்?

தங்கம் : இரண்டுமே ஒரே நாட்டில் - அரேபியாவில்தான் இருக்கின்றன. நபிகள் நாயகம் பிறந்தது மக்காவில்;காலமானது மதினாவில்.

சிவம் : தங்கமாரி! நீ மிகவும் சரியாகச் சொல்லி விட்டாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/48&oldid=484632" இலிருந்து மீள்விக்கப்பட்டது