பக்கம்:கேள்வி நேரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


ஆமையைப் பற்றி ஒரு கேள்வி. உங்கள் பதிலும் ஆமையைப் போல் மிக மிக மெதுவாக வரக்கூடாது. ஆமைக்கு எத்தனை பற்கள்?

சிவம் : தவறு.

தங்கம் : 28.

சிவம் : ஜோதி, நீ எத்தனை என்று சொல்லப்போகிறாய்? 24 என்றா?

ஜோதி : இல்லை அண்ணா. எனக்கும் தெரியாது.நீங்களே சொல்லிவிடுங்கள்.

சிவம் : ஆமைக்குப் பற்களே இல்லை! ஆனால், அதன் தாடைகளே நன்றாகத் தடித்துப் பற்களைப் போல் உதவுகின்றன. நான் இப்போது ஒரு தலைவரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். 14-வது வயதிலே பத்திரிகை நடத்தியவர் பாரதத்தின் கல்வி அமைச்சராக பத்து ஆண்டுகள் இருந்தார். அவர் பெயர் என்ன ?

முத்து: மெளலானா அபுல் கலாம் ஆஸாத்.

சிவம்: சபாஷ்! இவ்வளவு சரியாகச் சொல்லி விட்டாயே! சரி, உலகிலே மிகச் சிறிய, கண்டம் எது? மிகப் பெரிய தீவு எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/49&oldid=484633" இலிருந்து மீள்விக்கப்பட்டது