பக்கம்:கேள்வி நேரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


மீனைப் போல் இருக்காது. முகம் குதிரையைப் போல் இருக்கும். நிமிர்ந்து நின்றபடி நீங்தும்.

இப்போது ஒரு கவிஞரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். முத்துப் பாடல்கள் என்று உங்களுக்காகவே வெளிவந்துள்ள புத்தகத்தை எழுதியவர் யார்?

முத்து: பெ. துரன்.

சிவம் : இல்லை.

ஜோதி : தேசிகவிநாயகம் பிள்ளை.

சிவம் : அவரும் இல்லை.

தங்கம் : மயிலை சிவமுத்து.

சிவம் : மிகவும் சரி. மாணவர் மன்றம்' என்ற மிகவும் புகழ்பெற்ற மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்தவர் அவர். உங்களுக்காகவே வாழ்ந்த ஒரு பெரியவர். Chess என்று சொல்லுகிறோமே சதுரங்கம், அது எந்த நாட்டில் முதலில் தோன்றியது?

முத்து : நம் நாட்டில்தான்.

சிவம் : கரெக்ட். கி. பி. 6ஆம் நூற்றாண்டில் நம் இந்தியாவில் தோன்றி அது பாரசீகத்திற்குப் போனது. அங்கிருந்து பல நாடு களுக்கும் பரவி, இப்போது உலக ஆட்டம் ஆகிவிட்டது. சந்திர மண்டலத்தைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/53&oldid=484637" இலிருந்து மீள்விக்கப்பட்டது